வடக்கில் 457 தொண்டராசிரியர்களுக்கு விரைவில் நியமனம்

வடக்கில் நிலவும் தொண்டர் ஆசிரியர்கள் பிரச்சினைக்கு, தீர்வாக இரண்டாம் கட்டமாக 457 பேருக்கு நியமனம் எதிர்வரும் 22ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமனம் வழங்கப்பட உள்ளது.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் இதற்கான நிகழ்வு இடம்பெறும் என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கல் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தில் முதற்கட்டமாக 182 பேருக்கு அன்மையில் நியமனம் வழங்கி வைக்கபட்டது.

தற்போது இரண்டாம் கட்டமாக 457 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.

அவர்களில் 06 பேர் தேசிய பாடசாலைகளுக்கும், 451 பேர் மாகாண பாடசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.

நியமனம் பெருபவர்களில் தீவக பகுதிகளுக்கு 40 பேரும், யாழ் கல்வி வலயத்திற்கு 29 பேரும், கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு 142 பேரும், மடு கல்வி வலயத்திற்கு 04 பேரும், மன்னார் கல்வி வலயத்திற்கு 14 பேரும், முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு 59 பேரும், தென்மராட்சி கல்வி வலயத்திற்கு 10 பேரும், துனுக்காய் கல்வி வலயத்திற்கு 21 பேரும், வடமராட்சி கல்வி வலயத்தற்கு 34 பேரும், வலிகாமம் கல்வி வலயத்திற்கு 39 பேரும், வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு 16 பேரும், வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு 49 பேரும் மொத்தமாக 457 பகீந்து அளிக்கபட்டுள்ளது.

நியமனம் பெறுபவர்களுக்கு ஆசிரியர் பயிற்சிகள் வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435