வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர் போராட்டத்திற்கு வெற்றி

வடக்கு கிழக்கில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுவோருக்கு வெற்றிடங்களுக்கமைவாக நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டு நிறைவுக்குள்

இலங்கையின் அனைத்து ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் விசேட ஆலோசனையொன்றையும் முன்வைத்துள்ளார்.

அதன்படி 2018 ஆம் ஆண்டுக்கு முன்னராக சகல ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்பட்டு கல்வித்துறையில் பாரிய பயன் தரும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போதளவில் 1,093 பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரிய சேவையில் உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் 1,177 பட்டதாரி பயிலுனர்களை ஆரம்பக்கல்வி ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் மொழி மூலமான விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 3,482 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை சேவையில் சேர்த்துக் கொள்ளவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் ஆலோசகர்களுக்காக புதிய சேவையொன்று ஸ்தாபிக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண பாடசாலைகளில் க .பொ.த. உயர்தரம், டிப்ளோமா சித்தியடைந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க மாகாணங்களில் உள்ள வெற்றிடங்கள் ஆராயும் பணியும் முன்னெடுக்கப்படவுள்ளது

கல்வி அமைச்சரின் விசேட ஆலோசனையின் படியான மேற்படி திட்டங்களால் எதிர் வரும் காலங்களில் இலங்கையின் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435