வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலற்ற பட்டதாரிகளை எதிர்வரும 28ம் திகதி பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று சந்திக்கவுள்ளது.
முதலில் அம்பாறைக்கு செல்லவுள்ள குறித்த குழு தொடர்ந்து திருமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து பட்டதாரிகளை சந்திக்கவுள்ளது.
கிழக்கு விஜயத்தின் பின்னர் குறித்த குழுவினர் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தொழில் வாய்ப்பு வழங்குவது, சுய தொழில் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை கையளிக்கவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் கடந்த வியாழனன்று முன்வைத்த பிரேலணைக்கமைய இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர் பாராளுமன்ற உறுப்பினர் மாரசிங்க தலைமையில் இத்தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.