வடக்கு தொண்டராசிரியர் 182 பேருக்கு சில வாரங்களில் நியமனம்

வடக்கில் உள்ள 182 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இன்னும் ஒரிரு வாரங்களில் நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் போட்டிப்பரீட்சையினூடாக மேலும் 300இற்கும் மேற்பட்டோர் உள்வாங்கப்படவுள்ளனர் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (29) வடமாராட்சி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் உயர் தொழில்நுட்பபீடக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வட மாகாணத்தில் 1164 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. அவர்களில் பலர் வேறு தொழில்களுக்கு சென்றுள்ளனர். எஞ்சியிருந்து 528 பேர் ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் பலருக்கு சம்பளத் திரட்டுப் புத்தகத்தில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியமைக்கான விபரங்கள் பதியப்பட்டிருக்கவில்லை. யுத்தம் மற்றும் இடப்பெயர்வு காரணமாக இப்பதிவுகள் தவறிப்போயுள்ளன. இந்நிலையில் 182 பேர் மட்டுமே நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனம் இன்னும் ஓரிரு வாரங்களில் வழங்கப்படும். எஞ்சியிருக்கும் எஞ்சியிருக்கும் முன்னூறுக்கும் அதிகமானோரை அப்படியே கைவிட முடியாது. எனவே அவர்களுக்கு எவ்வாறு நியமனம் வழங்குவது சாத்தியமாகும் என்று அமைச்சு மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, இலகுவான போட்டிப்பரீட்சையொன்றை நடத்தி உள்வாங்க தீர்மானிக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்..

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435