வடக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் நியமனம்

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் பெப்ரவரி மாதம் முடிவடைவதற்குள் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்துள்ளார்.

ஆளுநருக்கும் வட மாகாண தொண்டர் ஆசிரியர் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (01) இடம்பெற்றுள்ளது. இதன்போதே ஆளுநர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

நிரந்தர நியமனங்களுக்கான அமைச்சரவை அனுமதிப் பத்திரம் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் ஆகியவற்றையும் வடமாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடம் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கையளித்துள்ளார்.

இதேவேளை, வடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பான விசேட கூட்டமொன்று கிளிநொச்சியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது நியமனம் வழங்கப்படும் தொண்டர் ஆசிரியர்களின் பெயர் விபரம் அறிவிக்கப்படும் என்றும் வடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் சங்கத் தலைவர் இ.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் 077 638 0629 என்ற தனது தொலைபேசி இலக்கத்துடன், தொடர்புகொண்டு தொண்டர் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று சங்கத்தின் தலைவர் மேலும் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435