வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
கடந்த 2013 ஆண்டு பட்டப்படிப்பை பூர்த்தி செய்த ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் உட்பட பல பட்டதாரிகள்நி தமக்கு நிரந்த நியமனங்கள் கிடைக்காமை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கில் இவ்வார்ப்பாட்டம் கடந்த திங்கட்கிழமை (27) முதல் முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள், திறந்த பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள் இச்சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரச தொழில்வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் விழகிவிடுவோம் என்ற காரணத்தைக் காட்டி தனியார் துறையினர் தொழில் வழங்க மறுப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவ்வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்களும் கைக்குழந்தையுள்ள தாய்மாரும் இரவு பகல் பாராது இச்சத்தியாக்கிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.