அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் பலர் வட மேல் மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு தூண்டுதலாக இருந்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்துள்ளார்.
குறித்த ஊழியர்கள் தொடர்பில் அவர்கள் பணியாற்றும் நிறுவன மேலதிகாரிகளுக்கு நிறுவனரீதியான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று (15) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பொலிஸ் 5500 பொலிஸார், அதற்கு மேலதிகமாக இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை திணைக்களம் சந்தித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.