2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு பதிலாக இடைக்கால வரவு-செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டுக்கான அரசாங்க செலவினங்களை ஈடுசெய்வதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, அடுத்த ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படவில்லை.
இதேநேரம், இடைக்கால பாதீடு யோசனை ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை.
எனினும், அரச செலவீனங்களுக்காக நிதி ஒதுக்கங்களை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இடைக்கால பாதீட்டு யோசனையை முன்வைக்க முடியும்.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் ஏற்பட்ட செயலவீனங்களை மையப்படுத்தி நிதி ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்படும்.
இதன் பின்னர், நாடாளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக கூட்டப்பட்டவுடன், பாதீட்டை முன்வைக்க முடியும் என்று நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.