வரி அறவீட்டை விமர்ச்சிக்கும் சர்வதேசம்

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் தமது தாய் நாட்டுக்கு பணப் பரிமாற்றம் செய்வதற்கு வரி அறவிட தீர்மானித்துள்ளமையை சர்வதேச நாடுகள் விமர்சித்துள்ளதாக அராப் டைம்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

அப்பாவித் தொழிலாளர்கள் பணப்பரிமாற்றம் செய்வதற்கு வரி அறவிடப்படுகின்றமைக்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளதாகவும் அராப் டைம்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வரியறவிடும் செயற்பாட்டின் காரணமாக தனியார் துறையில் பணியாற்றும் 90 வீதமான புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த வௌிநாடுகளுக்கு சுமார் 84.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி பரிமாறப்படுகிறது. விதிக்கப்பட்டுள்ள 5 வீத வரியினூடாக மத்திய மொத்த வருமானத்தில் 0.3 வீதம் பங்களிப்பு மத்திய கிழக்கு நாடுகளுக்கு கிடைக்கும். இதனூடாக நாடுகளின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் பாரிய வருமானமொன்று இவ்வரி விதிப்பினூடாக கிடைக்கப் போவதில்லை என்றும் அராப் நியுஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய கிழக்கில் பணியாற்றுவதற்கு தொழிலாளர்களுக்கு உள்ள ஆர்வத்தை இவ்வரி விதிப்பு இல்லாமல் செய்வதாகவும், தொழில் இல்லாமல் குறித்த நாடுகளில் தங்கியிருக்கும் வௌிநாட்டவர்களை உடனடியாக நாட்டை விட்டு வௌியேற்றாவிட்டால் சமூகத்தின் அனைத்து துறைகளுக்கும் அவர்களால் பாதிப்பேற்படும் என்றும் அராப் நியுஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில், நிறுவன நிருவாகம், தொழிலாளர் அதிகரிப்பு, மற்றும் போலி வீஸா தயாரிப்பில் ஈடுபடும் நபர்களை கைது செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435