வற் வரி அதிகரிப்புக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்

அதிகரிக்கப்பட்ட வற் வரியை எதிர்த்து கண்டி வர்த்தக சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு நாளை மறுநாள் (29) கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளது.

அண்மையில் கண்டி சம்பத் மண்டபத்தில் நடைபெற்ற நடைபெற்ற வர்த்தக சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, இன்று 27ஆம் திகதி முதல் சகல வர்த்தக நிலையங்களின் முன்பாகவும் வற் வரிக்கு எதிர்ப்பைத் தெரிவித்து கறுப்புக் கொடியைப் பறக்க விடுதல்.

29ஆம் திகதி காலை 10 மணிக்கு கண்டியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை மூடி கண்டி ஜோர்ஜ் சில்வா பூங்காவில் நடை பெறும் கூட்டம் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பவற்றில் கலந்து கொள்ளல் போன்ற தீர்மானங்களும் எட்டப்பட்டன.

இது அரசியல்சார்பற்ற ஒரு அமைப்பு. அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட வற் வரியானது ஒரு அநீதியமான வரியாகும். எனவே இதனை நீக்கிவிட்டு நியாயமான ஒரு வரி முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என வேண்டுகிறோம். இது அரசுக்கு எதிரான ஒரு போராட்டமல்ல. அநீதிமயான ஒரு வரிக்கு எதிரான போராட்டமாகும் என்று சிங்கள வர்த்தகர் சங்கத்தின் அமைப்பாளர் கே.எம்.ஆர். குலதுங்க தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435