தாதிமார் சங்கம் நடவடிக்கை எடுக்க திட்டம்

தாதியர் சேவையில் வார விடுமுறை நாட்கள் மற்றும் பிரசித்த விடுமுறை நாட்களை இல்லாமல் செய்தமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக அகில இலங்கை தாதிமார் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை தாதிமார் சங்க தலைவர் ஓய்வு நாட்கள் இல்லாமல் செய்துள்ளமையினால் தாதியரைப் போன்றே நோயாளர்களும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். தாதியர் சேவையில் தற்போது சுமார் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அந்த இடைவெளியை நிரப்புவதற்காக தாதியர் ஓய்வு நாட்களிலும் அரச விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435