வற் வரி விதிக்கப்படாத பொருட்கள் மற்றும் சேவைகள்

நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்ட 15 வீத வற் வரி அதிகரிப்பில் உள்ளடங்காத பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய விபரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அரிசி, விதை நெல், கோதுமை, ஏலக்காய், கராம்பு, சாதிக்காய், பால் மா, முட்டை, கச்சா எண்ணெய், மண்ணெண்ணெய், டீசல், பெற்றோல், எரிவாயு தேங்காய், இறப்பர் , தேங்காய் பால், தேயிலை, அரிசி மா, கோதுமை மா, பாண், பால் மா, முட்டை, திரவ பால் ,மருந்து வகைகள், ஆயுர்வேத மருந்துகள், மிளகு, விமானம், ஹெலிகொப்டர், முத்து, மாணிக்கம், வைர தூள், விலை மதிப்பற்ற உலோகம், தங்க நாணயம், புத்தகம் , கச்சா எண்ணெய், மண்ணெண்ணெய் , எரிவாயு, டீசல் ,பெற்றோல், கப்பல் எண்ணெய் வகைகள், செயற்கை கால், விசேட தேவையுடையோருக்கான சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள், செவிப்புலனற்றவர்களுக்கான கேட்டல் உதவி கருவிகள், வெள்ளை பிரம்பு, பிரெயில் தட்டச்சு உபகரணம் மற்றும் உதிரிப்பாகங்கள், விவசாய ரக்டர் வண்டிகள் ,கையடக்கத் தொலைபேசி, விவசாய இயந்திரங்கள், உரம் ,விதை, செடிகள், நிர்மாணத்துறை இயந்திரங்கள், பசும்பால் உற்பத்தி இயந்திரங்கள் ,கணணி மற்றும் கணணி பாகங்கள், , நெல் உற்பத்தி இயந்திரங்கள் ,சூரியஒளி உபகரணங்கள், மின்சார உற்பத்தி போன்றவைகள், உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள், நிலக்கரி, தார், இறால், பேக்கரி உற்பத்தி மற்றும் பேக்கரி உற்பத்தி சார்ந்த இயந்தி­ரங்கள் ,இறப்பர் தயாரிப்பிலான செருப்பு ,பைகள் , டெக்ஸி மீற்றர், மின் உபகரணங்கள், பழ விதைகள், தொலை தொடர்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள், ரயில்வே மற்றும் .இ.போ.சபைக்கு மாத்திரம் சொந்தமான வாகன உதிரி பாகங்கள், லொறி, டிரக் வண்­டிகள், பஸ் வண்டிகள், விளையாட்டு பொருட்கள், இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகள், வாசனை திரவியங்கள், கண் வில்லை சார்ந்த உற்பத்திகள், தளபாடங்கள், உள்நாட்டு நுகர்வு துணிகள், பவுசர், புல்டோசர், கிரேடில், லிவர்ஸ், அகழ்வு பணி இயந்திரங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆற்றல் சேமிப்பு மூலப்பொருட்கள், இறக்குமதி செய்யப்படும் மர அலங்கார வகைகள், விற்றமின் நிறைந்த உணவு பதார்த்தங்கள், கடல் மண் , உள்ளூர் கைத்தறி உற்பத்திகள், தென்னை நார், பைபர் களிமண்ணால் ஆன கூரை ஓடு, உள்ளூர் உற்பத்திகளான பசும் பால் ,அரிசி ,சீனி ,தேயிலை, பார்ம் எண்ணெய் போன்றவை, விமான பாகங்கள் ,மருந்தக உற்பத்­திகள் , நகை தயாரிப்புகள், உள்ளூர் மென்பொருள் தயாரிப்பு ,காற்றாலை மின் உற்பத்தி உபகரணங்கள் போன்றவைகளுக்கு வற் வரி அதிகரிக்கப்படவில்லை.

கல்வி துறை சார்ந்த சேவைகள், பொது நூலக சேவைகள் ,போக்குவரத்து சேவைகள், மின் சேவைகள் ,வங்கி மற்றும் வணிக சேவைகள், வாழ்க்கை காப்புறுதி, அக்ரஹார காப்புறுதி சேவை, திரைப்பட துறைசார்ந்த தயாரிப்புகள், துறைமுக துறை சார்ந்த சேவைகள், உள்ளூர் தொழில்நுட்ப தொலைதொடர்பு சேவைகள், அபிவிருத்தி சேவைகள் ,வெளிநாடுகளிலிருந்து ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகள் விளையாட்டு நிகழ்வு ஏற்பாடுகள் போன்றவையும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435