ரயில்போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (24) காலை அலுவலக ரயில், கொழும்பு மற்றும் மருதானை ரயில்நிலையங்களில் பயணத்தை தொடங்கும் ரயில்கள் சில சேவையை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரித்து வழங்குமாறு பிரதமர் அலுவலகம் ரயில்வே திணைக்கள தொழிற்சங்கங்களிடம் கோரியுள்ளது என்று புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜானக்க பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.