வவுனியா மாவட்ட தனியார் பேருந்து பணியாளர்கள் இன்று (18) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா புதிய பேருந்துகள் நிலையத்தினுள் வெளிமாவட்ட பேரூந்துகள் உட்செல்வதினை தடை செய்ய வேண்டும், புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வெளிமாவட்ட பேரூந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதை தடை செய்ய வேண்டும், இணைந்த நேர அட்டவணையினை உடனே அமுல்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து வெளிமாகாணங்களுக்கு செல்லும் தனியார் பேரூந்துகள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் இன்றைய தினம் அனைத்து மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பேரூந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றையதினம் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொருப்பதிகாரி தலமையிலான குழுவினர் தனியார் பேரூந்து ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போதிலும் அது பயனளிக்கவில்லை
இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வெளிமாவட்டங்களிலிருந்து இலங்கை போக்குவரத்து சபையினர் பேரூந்துகளை வரவழைத்து சேவையில் ஈடுபடுத்தியுள்ள போதிலும் அந்தப் பேரூந்துகள் வவுனியாவிலிருந்து வெளி மாவட்டங்களுக்கே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிமூலம்: வன்னிசெய்திகள்