வார இறுதியில் கட்டாரில் காலநிலை குறித்து அவதானமாயிருங்கள்

நாளை (15) தொடக்கம் கட்டாரின் காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் கடுமையான காற்று வீசும் சாத்தியம் காணப்படுகின்றமையினால் அவதானமாக இருக்குமாறும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

நாளை கட்டாரின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான காற்று வீசக்கூடும் என்றும் வீதிகளில் தௌிவின்மை காணப்படலாம் என்றும் அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டில் ஆங்காங்கே காணப்படக்கூடும் என்றும் கடற்பகுதிகளில் அதிக காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வடமேலாக வீசும் காற்று கடலில் 15- 25 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும். சில நேரங்களில் அவ்வேகம் அதிகரிக்கக்கூடும். கடலோர பிரதேசங்களில் 18- 20 மீற்றர் வேகத்தில் வீசும் காற்றானது சில இடங்களில் 35 கிலோ மீற்றர் வேகமாகவும் வீசும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. அலைகள் சுமாலர் 12 அடி வரையில் உயரமாக எழும்பக்கூடும். வீதிகளில் 2 கிலோ மீற்றர் தொலைவிற்கு மட்டுமே தௌிவாக பார்க்கக்கூடியதாக இருக்கும்.

அபு சம்ரா பிரதேசத்தில் வெப்பநிலை 10 செல்ஸியசாகவும் அல் நோர் மற்றும் துகான் ஆகிய பிரசேதங்களில் 12 செல்சியஸாகவும் வக்ராஹ் மற்றும் மேஷயீட் ஆகிய பிரதேசங்களில் 14 செல்சியஸாகவும் ருவயிஸ் பிரதேசத்தில் 15 செல்சியஸாகவும் டோஹாவில் 17 செல்சியஸாகவும் வெப்பநிலை குறைவடயைக்கூடும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் கட்டார் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435