ஓய்வு பெற்ற காவல்துறை மற்றும் காவல்துறை விசேட படையணியின் அங்கவீன அதிகாரிகள் இன்று (02) மீண்டஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்
ஓய்வூதியம், பதவி உயர்வு கொடுப்பனவு முறையாக வழங்க காவல்துறை திணைக்களம் தவறியுள்ளதாக காவல்துறை விசேட தேவையுடையவர்கள் சங்கத்தின் தலைவர் அசேல குமார சுட்டிகாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், விசேட தேவையுடைய அதிகாரிகளுக்கான கொடுப்பனவுள் இந்த மாதம் முதல் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பத்துவருடங்கள் சேவையை நிறைவு செய்யாத அதிகாரிகளுக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுப்பதற்கும், 12 வருடங்கள் சேவையை நிறைவுசெய்யாத அதிகாரிகளுக்கு பதவியுயர்வுடனான கொடுப்பனவுகளும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.