விடாத மழையினால் மூழ்கியுள்ள சவுதி

சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள அடை மழைக் காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் பல சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளது.

சவுதியின் டைஃப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மழை காரணமாக அப்பிரதேசத்தின் போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் பாரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் அல் மன்சூர் இளவரசர் சுரங்கத்தில் வெள்ளம் அதிகரித்துள்ளனமையினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்பிரதேசத்தில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

ஐந்து மணித்தியாலங்களுக்கும் அதிகமாக மழை பெய்வதனால் சவுதியின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள வீடுகள், வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளன. பெருந்தெருக்களினூடாக அதிக வெள்ளம் ஓடுவதால் வீதிகள் உட்புதைவதாகவும் அதிக எண்ணிக்கையான வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இதுவரை வெள்ளத்தில் சிக்குண்ட 42 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று சவுதி பொதுப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேத விபரங்கள் இதுவரையில் கணிப்பிடப்படவில்லை. மழை குறைவதற்கு பதிலாக அதிகரித்த வண்ணமே செல்வதாகவும் இதனால் தொழில் நிமித்தம் மற்றும் ஏறைய காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்குமாறும் அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435