ஆசிரியர்களின் விடுமுறைக்கால சம்பளம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

விடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இணையத்தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை விடுமுறை காலத்தில் ஆசிரியர்களுக்கான சம்பளம் இடைநிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டு போலிப் பிரசாரங்கள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியினால் எழுத்துமூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும், ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பதுளையில் வைத்து குறிப்பிட்டதாக அண்மையில் சில ஊடகங்களில் தகவல் வெளியாகியது.

இந்த தகவலை கல்வி அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த செய்தியில் எவ்விதஅ உண்மையும் இல்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது சூழ்ச்சியாளர்களின் நடவடிக்கை என்றும், குறித்த போலிப் பிரசாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தம்மால் இயலுமாயின், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435