விதிப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ரயில் ஊழியர்கள்

சில கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (18) நள்ளிரவு முதல் விதிப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பிக்க, ரயில் ஓட்டுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது வேண்டுகோள்களுக்கு தீர்வினை பெற்றுத் தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமையால் இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, லொகொமேட்டிவ்ஸ் ஒபரேடிங் பொறியியலாளர்கள் சங்கம் (Locomotive Operating Engineers Union) சுட்டிக்காட்டியுள்ளது.

ரயில் எஞ்சின் ஓட்டுநர் துறையில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு, ரயில் எஞ்சின் ஓட்டுநர்களை பணிக்கு நியமிக்கும் நடைமுறை உள்ளிட்ட சில காரணங்களை முன்னிலைப்படுத்தி தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் போக்குவரத்து அமைச்சிடம் தாம் இது தொடர்பில் கோரியுள்ளதாக சுட்டிக்காட்டிய அச் சங்கம், இதுவரை இந்த விடயம் குறித்து அதிகாரிகள் அவதானம் செலுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று நள்ளிரவு வரை ரயில் பாதுகாப்பு சட்டம் மற்றும் பாதைகளில் நிலவும் அனைத்து வேக கட்டுப்பாடுகளையும் பின்பற்றி ரயில் போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் லொகொமேட்டிவ்ஸ் ஒபரேடிங் பொறியியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இன்று நள்ளிரவு முதல் ரயில் போக்குவரத்து பாதுகாப்புக்கான கருவிகள் மற்றும் ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் பகுதியில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் இன்றி தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435