வின்வுட் தேயிலை தொழிற்சாலை ஊழியர்கள் பிரச்சினைக்கு தீர்வு

வின்வுட் டீஸ் (தனியார்) நிறுவனத்திற்கு சொந்தமான சப்புமல்கந்த தேயிலைச் தொழிற்சாலை பணியாற்றும் ஊழியர்களின் EPF, ETF, ESPS வங்கிக் கடன் ஆகியவற்றுக்காக சம்பளத்தில் குறைக்கப்பட்ட தொகையை செப்டெம்பர் மாதம் தொடக்கம் அந்தந்த நிறுவனங்களுக்கு செலுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்திற்கும் குறித்த நிறுவனத்திற்கும் இடையில் இம்மாதம் 3ம் திகதி பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைத் தொகையையும் செலுத்துவதற்கு கம்பனியின் நிர்வாகி இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் பொகவந்தலாவ பெருந்தோட்டக் கம்பனியின் நிறைவேற்று அதிகாரி லலித் முனசிங்க, வின்வுட் பெருந்தோட்டக் கம்பனி சார்பாக அதன் பணிப்பாளர் கோலித்த ஆரியசேன ஆகியோரும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் சார்பாக பிரதான செயலாளர் நாத் அமரசிங்க, பொருளாளர் நிஷாந்த வன்னியாராய்ச்சி, பிரதிச் செயலாளர் ஸ்டென்லி கல்ஹேன, சப்புமல்கந்த தேயிலை தொழிற்சாலை பிரிவுத் தலைவர் மஹேஸ் ரணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிரந்தனர்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435