விபத்துக்குள்ள கட்டிட பணியாளருக்கு ஒரு மில். திர்ஹம் நட்டஈடு

பணி நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட கட்டிட நிர்மானப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிய நபருக்கு ஒரு மில்லியன் திர்ஹம் நட்டஈடு வழங்குமாறு அபுதாபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்ட சுவரொன்றை விளையாட்டாக இருவர் தள்ளி விளையாடியபோது சுவர் இடிந்து விழுந்ததில் அதன் அருகாமையில் அமர்ந்து பகலுணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த குறித்த நபரின் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதில் அவர் உடற் செயற்பாடுகள் முற்றாக செயலிழந்துள்ளன என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுயமாக சிறுநீர் மலம் என்பவற்றைக் கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ள குறித்த நபரே அவருடைய குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் மற்றும் பெற்றோரை பராமரித்து வருபவர் என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம் குறித்த நபருக்கான நட்டஈட்டில் 5000 திர்ஹம்களை உடனடியாகவும் 200,000 திர்ஹம்களை தண்டனை வழங்கப்பட்ட பின்னர் செலுத்துமாறும் விபத்துக்கு காரணமான சக ஊழியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம் வேண்டுமென்றே இக்குற்றத்தை செய்யவில்லையென விபத்துக்கு காரணமான சக ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435