இலங்கைக்கு திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் 14 பேர் நேற்றுமுன்தினம் அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் தங்கியிருந்த 9 பேர் 11ம் திகதி இரவு 11.35 மணிக்கு சிங்கப்பூர் விமானசேவையின் எஸ்.கிவ்- 468 விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும் 12ம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் கட்டார் விமான சேவையின் – 668 இலக்க விமானத்தினூடாக அந்நாட்டு விமான நிலையத்தில் தங்கியிருந்த 5 பேர் இலங்கையை வந்தடைந்தனர்.