விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு

தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை வழங்க அதிகாரிகள் தவறும்பட்சத்தில், விரைவில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக பெற்றோலியக்கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு தெரிவித்துள்ளது.

மேற்குறித்த விடயம் தொடர்பில் அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் அழைப்பாளர் டி.ஜே. ராஜகருணாக தெரிவித்துள்ளார்.

22ஆம் திகதிக்கு பின்னர் எந்தநேரத்திலும் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர் அதற்கமைய எதிர்வரும் தினங்களில் குறுகிய கால அறிவித்தலின் பின் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும்.

இதேவேளை, இன்று 23ம் திகதி நள்ளிரவு தொடக்கம் வேலைநிறுத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானித்திருந்த ரயில் ஓட்டுநர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தமது கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும் என்று லெகோமோட்ச் ஒபரேட்டிங்க பொறியிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435