வீசா அனுமதிப் பத்திரங்களை நீடித்தலுக்கான அறிவித்தல்

இலங்கையில் தரித்திருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதிப் பத்திரங்களை நீடித்தல் தொடர்பில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் 2020.04.24 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு மேலதிகமாக.

தற்சமயம் இலங்கைக்கு வருகை தந்திருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டிருக்கும் எல்லா வகையான வீசாக்களினினதும் செல்லுபடிக் காலத்தை 2020 மே மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 யூன் மாதம் 11 ஆம் திகதி வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்பதை தயவுடன் அறியத் தருகின்றோம்.

எனவே, கீழ்க் காட்டப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

1. எல்லா வீசா விண்ணப்பதாரிகளும் 2020 யூன் மாதம் 11 ஆம் திகதி அல்லது முன்னர் கீழ்க் காணும் இணையத்தள நீடிப்பு ஊடாக திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு, உரிய வீசா கட்டணத்தைச் செலுத்தி, தமது கடவுச்சீட்டில் வீசாவை புறக்குறிப்பு இட்டுக் கொள்ளுமாறு அறியத் தருகின்றோம். 2020 மார்ச் மாதம் 07 ஆம் திகதிக்கும் 2020 யூன் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் காலாவதியாகும் எல்லா வீசாக்களும் தண்டப் பணம் அறவிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படுகின்றது.

https://eservices.immigration.gov.lk/vs

2. உரியவாறு திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு வருகை தருவோருக்கு மட்டும் திணைக்கள வளாகத்தினுன் பிரவேசிப்பதற்கு அனுமதியுண்டு. நாளொன்றில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவை வழங்கப்படுவதால், ஒதுக்கிக் கொள்ளப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பதாக விண்ணப்பதாரிகள் திணைக்களத்திற்கு வருகை தர வேண்டும் என்பதை தயவுடன் கவனத்திற் கொள்ளவும். விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்பட்ட நேரம் அடுத்த 10 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர் விண்ணப்பதாரிகளுக்கு திணைக்கள வளாகத்தினுன் பிரவேசிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன், மேற்சொன்ன முறை ஊடாக புதிய திகதியொன்றை மீண்டும் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

3. இது தொடர்பில் உங்களுக்கு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு கீழ்க் காணும் முறைகள் ஊடாக எமது உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல்:
குறுகிய கால வீசா (Visit Visa)
[email protected]
[email protected]
[email protected]

வதிவிட வீசா (Residence Visa)
[email protected]

தொலைபேசி இல.: 070-7101050 (மு.ப. 9.00 மணிக்கும் பி.ப. 4.00 மணிக்கும் இடையில் தொடர்பு கொள்ளவும்)

4. தவிர்க்க முடியாத நிலைமைகள் காரணமாக, நீங்கள் ஒதுக்கிக் கொண்ட திகதியில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தும் பட்சத்தில், திணைக்களத்திற்கு வருகை தருவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு தயவுடன் அறியத் தருகின்றோம். இதற்குப் பதிலாக ஏற்கனவே உங்களுக்கு வழங்கப்பட்ட “திகதி மற்றும் நேரம் ஒதுக்கப்பட்ட அறிவித்தலை” மேற்சொன்ன மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கவும். தொடர்ந்து உங்களுக்கு புதிய திகதியொன்றும் நேரமும் மிக விரைவில் பெற்றுத் தரப்படும்.

5. இக் காலப்பகுதியிடையே நீங்கள் தீவிலிருந்து வெளியேறுவதற்கு கருதுவீர்களானால், மேற்சொன்ன வீசா நீடிப்புடன் தொடர்புடைய வீசா கட்டணங்களை விமான நிலையத்தில் வைத்து செலுத்தி தீவிலிருந்து வெளியேறுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் பணிப்புரைகளுக்கு அமைய இவ் அறிவித்தல் வெளியிடப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435