வீட்டுத் தோட்ட உற்பத்தித்திட்டம்: ரூ. 5 இலட்சம் வரை விவசாயக் கடன்

நவ சபிரி என்ற கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 4% வட்டியின் அடிப்படையில், 36 வகையான பயிர்களை உற்பத்தி செய்வதற்காக ரூபா 5 இலட்சம் வரையான கடன் வழங்கப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட ஜனாதிபதி செயலணி இதனை அறிவித்துள்ளது .

அரசாங்க வங்கிகள் மூலம் இந்த கடன் வழங்கப்பட்வுள்ளது.கடனை மீளச் செலுத்தும் காலம் ஒன்பது மாதங்கள். என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல், மிளகாய், வெங்காயம், கௌபி, பாசிப்பயறு, உழுந்து, சோயா, குரக்கன், சோளம், நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, உருளைக்கிழங்கு, வற்றாளை, மரவள்ளி, பால்கிழங்கு, மரக்கறி, கத்தரிக்காய், வெண்டிக்காய், பீட்ரூட், போஞ்சி கோவா, கரட் கறி மிளகாய், தக்காளி, லீக்ஸ், ராபு, நோகோல், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கை, இஞ்சி, கரும்பு முதுவானவற்றை இந்த கடன் திட்டத்தின் கீழ் உற்பத்திச் செய்ய முடியும்.

வ சபிரி கிராமிய கடன் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டமொன்றை அமைக்க ஆகக்கூடிய தொகையாக ரூபா 40 ஆயிரம் வரையான கடனுதவியை 4%வட்டியில் அரச வங்கிகள் ஊடாக கடனாக வழங்க மத்திய வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நன்றி – News.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435