கொழும்பில் அனுமதியற்ற வீதியோர வியாபாரத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 திகதி தொடக்கம் அனுமதியற்ற வீதியோர வியாபரங்களை அகற்றுவது என்று இத்திட்டத்தின் நோக்கம் என்று நேற்று (19) அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கொழும்பு நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வீதியோர வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்களின் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். மேலும் பல விபத்துக்களுடம் இடம்பெறுகின்றன.
எனவே வீதியோர வியாபாரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வியாபாிகளுக்கான மாற்றிடத்தை கொழும்பு மாநாகரசபை அடையாளங்கண்டுள்ளது. அம்மாற்று இடங்களில் மின்சாரம், மலசலகூட வசதி என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்