வீஸாவுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க குவைத் தீர்மானம்

தங்கி வாழ்வோருக்கான வீசாவை பெறுவதற்கான அடிப்படை சம்பளத்தின் அளவை அதிகரித்துள்ளதாக குவைத் உள்விவகார அமைச்சு நேற்று (12) அறிவித்துள்ளது.

தங்கி வாழ்வோருக்கான வீசாவிற்கான அடிப்படை சம்பளத்தின் அளவு 250 குவைத் டினாரில் இருந்து 450 டினாராக அத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வௌிநாட்டவர் தங்கியிருக்கும் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இப்புதிய சட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய சட்டத்திற்கமைய குவைத்தில் பணிபுரியும் வௌிநாட்டவர்கள் தமது மனைவி, பிள்ளைகளை தங்கிவாழ்வோர் வீஸாவினூடாக அந்நாட்டுக்கு அழைப்பிப்பதானால் அதிக தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.

ஏற்கனவே அந்நாட்டில் குடும்பமாக தங்கியிருப்போர், அந்நாட்டிலேயே பிறந்த வௌிநாட்டவர்கள் மற்றும் கல்வி கற்போர் தொடர்பில் ஆராய்ந்து குறித்த சட்டத்திலிருந்து விலக்க முடியுமா என்பது தொடர்பில் உள்விவகார பணிப்பாளர் நாயகம் திணைக்களம் ஆராயும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவைத்தில் வாழும் 3 மில்லியன் வௌிநாட்டவர்களில் குறைந்த எண்ணிக்கையானவர்களே 450 குவைத் டினாருக்கு அதிகமாக சம்பளமாக பெறுகின்றனர். தனியார் துறையில் பணியாற்றும் புலம்பெயர் ஆண் ஊழியர் ஒருவர் மாதந்த வேதனமாக 247 டினாரை சம்பளமாக பெறுகிறார். இந்நிலையில் தங்கி வாழ்வவோருக்கான வீஸாக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை சம்பளம் 250 டினார் என்று கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவைத் சனத்தொகையில் 70 வீதமானவர்கள் வௌிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435