வீஸா கட்டணமின்றி இலங்கைக்கு வர 48 நாடுகளுக்கு அனுமதி

இலங்கைக்கு வருகைத் தருவதற்கு இலவசமாக வீஸா வழங்கும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக சுற்றுலா, வன மற்றும் கிறிஸ்த்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் கொள்ளுபிட்டியில் உள்ள ஹோட்டல் பாடசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு சுற்றுலாப்பிரயாணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் 48 நாடுகளுக்கு கட்டணமின்றி வீஸா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எனினும் வீஸாவுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியா, ஒஸ்ட்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, கம்போடியா, சீனா, குரேஷியா, சைப்ரஸ், டென்மார்க், எஸ்த்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ஹங்கேரியா, இந்தியா, இந்தோனேஷியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், லித்துவியா, லக்சம்பர்க், மலேஷியா, நெதர்லாந்து, நியுசிலாந்து, நோர்வே, பிலிப்பைன்ஸ், போலாந்து, போர்த்துக்கல், ருமேனியா, ரஷ்யா, சிங்கப்பூர், தென்கொரியா, ஸ்லோவக்கியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, உக்ரேயின், செக் குடியரசு, மோல்டா, ஐக்கிய ராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு கட்டணமற்ற வீஸா வழங்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மே மற்றும் ஜூன் மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 37,000 ஆக வீழ்ச்சியடைந்த போதிலும் மிக குறுகிய காலத்தில் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட நம்பகத்தன்மையினால் சுற்றலாப்பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்தது என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435