வெளிநாடுகளில் பணியாற்றிய 40 இலங்கையர்கள் கொரோனாவினால் மரணம்

தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற 40 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பணியத்தின் தலைவர் கமல் ரத்வத்த இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களில் 37 ஆண்களும், 3 பெண்களும் உள்ளடங்குகின்றனர். எனினும் உலக சுகாதார நிறுவனத்தின் ஒழுங்குக்கு அமைய சடலங்களை இலங்கைக்கு கொண்டுவர முடியவில்லை.

இந்த நிலையில் அரசாங்கத்தின் உடன்படிக்கைக்கு அமைய இறந்தவர்களின் உறவினர்களுக்கு 5 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்கப்படுகிறது.

பணியகத்தில் பதிவு செய்து கொண்டோருக்கே இந்த 5 லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்படும். பதிவு முடிவடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபா மாத்திரமே வழங்கப்படும்.

இதேவேளை 2020 மார்ச் 16ஆம் திகதிக்கு பின்னர் பணியகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் இறந்திருந்தால் அவர்களுக்காக 6 லட்சம் ரூபா வழங்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435