இறுதி வெளியேற்ற விசாவில் சவுதியை விட்டு வெளியேறும் வெளிநாட்டவர்களுக்கு சவுதி அரேபியாவுக்கு திரும்புவதற்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை சவுதி அரேபியாவில் உள்ள ஜவாசத் (பாஸ்போர்ட் பொது இயக்குநரகம்) மறுத்துள்ளது.
இறுதி வெளியேற்ற விசாக்களில் வெளியேறுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் புதிய விசாவில் சவுதி அரேபியாவுக்கு திரும்பலாம் என்று சவுதி ஜவாசாத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இகாமாவின் காலாவதி திகதியிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகு இகாமா புதுப்பிக்க தாமதப்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இகாமா புதுப்பித்தலை முதல் முறையாக தாமதப்படுத்தினால் 500 ரியால் அபராதம் விதிக்கப்படும்,
இரண்டாவது முறையாக இருந்தால் 1000 ரியாலாக இரட்டிப்பாகும்,
3 வது முறையாக இகாமா புதுப்பித்தலை தாமதப்படுத்தினால் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
குடும்பத் தலைவர் இராச்சியத்திற்குள் இருந்தால் மட்டுமே வெளிநாட்டினரின் இகாமா புதுப்பித்தல் அனுமதிக்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்தியது.
குடும்ப உறுப்பினர்கள் சவுதி அரேபியாவிற்கு வெளியே இருக்கிறார்களா அல்லது உள்ளே இருக்கிறார்களா என்பது முக்கியமல்ல, குடும்பத் தலைவர் ராஜ்யத்திற்கு வெளியே இருந்தால் இகாமா புதுப்பித்தல் சாத்தியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : கல்ப் ஹெட்லைன்ஸ் தமிழ்