வெளிநாட்டு பணிநாடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான அடிப்படை சம்பளம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் முன்வைத்த 2017ம் ஆண்டுக்கான பாதீட்டிற்கமைய இச்சம்பள உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
அதற்கமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுக்கு பணிக்காக செல்லும் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்க அடிப்படை சம்பளத்தை 450 அமெரிக்க டொலரும் பயிற்சியற்ற பணியாளர்களுக்கு 350 அமெரிக்க டொலரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் தொடக்கம் ஏற்பட்டுள்ள இம்மாற்றத்திற்கமையவே இனிவரும் காலங்களில் தொழில்வாய்ப்புக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு செல்லுமாறும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இச்சம்பள மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ள தொழில் வாய்ப்புகள் தொடர்பான மேலதிக தகவல்களை, கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக பெற்றுக்கொள்ளலாம்.
011 2 864 107 – முதலாம் அனுமதி இலக்கம்
011 2 880 500 – பொது தொலைபேசி இலக்கம்
011 2 251 148 – 24 மணி நேர சேவை
011 2 251 386 – 24 மணி நேர சேவை
1989 – உடனடி தொடர்பிலக்கம்