வெளிநாடுகளுக்கு வீட்டு பணியாளர்களாக பணிக்குச் செல்வோருக்காக விசேட சீருடை அறிமுகப்படுத்தப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சீருடை அணிந்தவாறு பெண் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வதாக அண்மைய நாட்களணியில் சமூக ஊடகங்களில் தகவல் வெளியாக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம், அவ்வாறான சீருடை அறிமுகப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
நாட்டினதும், தம்முடையதும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து செல்லுமாறு அந்தப் பணியகம் அறிவித்துள்ளது.