வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆசைக்காட்டி ஒரு கோடி ரூபாய் மோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் மொரட்டுவையில் பதிவாகியுள்ளது.

இதில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மொரட்டுவை – ராவதாவத்தை பகுதியில் நடத்தி செலப்பட்டுள்ள குறித்த மோசடியுடன் தொடர்புடைய நிறுவனத்தின் உரிமையாளர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் எனவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நிறுவனம் இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி பலரிடம் தலா 8 லட்சம் ரூபாய் வீதம் பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இதுவரை காலம் தமக்கு எந்தவொரு வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என குறித்த மோசடியில் சிக்குண்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய அந்த வெளிநாட்டு வேலைவாயப்பு முகவரகத்தில் பணிபுரிந்த பெண்ணொருவர் மாத்திரம் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்ட ஏனைய தரப்பினரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூலம் : Sooriyanfmnews.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435