வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வெளிவாரி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகத்தில் உள்வாரியாக உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கமையவாகவே வெளிவாரி கற்கைக்கும் மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சில பல்கலைக்கழங்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் வெளிவாரி பட்டப்படிப்பிற்காக விண்ணப்பிக்கின்றனர். அதனை தடுப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகம் போன்ற வெளிவாரி பட்டப்படிப்பை வழங்கும் பல்கலைக்கழங்களில் இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பதிவதால் வெளிவாரி பட்டப்படிப்பின் தரம் கேள்விக்குரியாகியுள்ளது.
எனவே எதிர்வரும் காலங்களில் வெளிவாரி பட்டப்படிப்புக்காக பதிவு செய்யும் மாணவர்கள் மற்றும கற்கை நிலையங்களின் தரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது என்று ஆணைக்குழுவின் பதில் தலைவர் பேராசிரியர் பீ.எஸ்.எம் குணரத்ன தெரிவித்தார்.
வேலைத்தளம்