
வெவ்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரே தங்குமிடத்தில் இருப்பது குறித்து மீள ஆராயுமாறு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் பல ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் சில இடங்களில் ஒன்றாக தங்கியுள்ளனர். இது கொவிட் 19 பரவலை அதிகரிக்கச் செய்யும் அபாயம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரே இடங்ககளில் தங்கியிருப்பதனால் ஒரு தொழிற்சாலையில் இருந்து மற்ற தொழிற்சாலைக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். அவ்வாறு தங்கியிருப்பவர்கள் தமது பாதுகாப்பு குறித்து இரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு ஏற்பட்ட கொவிட் 19 தொற்று அவருடன் தங்கியிருந்த மற்றொரு தொழிற்சாலை ஊழியருக்கும் பரவியிருந்தது. ப்ரெண்டிக்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள் ஏனைய தொழிற்சாலை ஊழியர்களுடன் தங்கியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.