அரச நியமனத்தில் பெற்று ஏற்கனவே பணியில் இருக்கும் 104 பேர் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலாளர் ந. வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அரசப்பணியில் உள்ளனர் என்ற தகவலை மறைத்து நியமனம் பெற முயற்சித்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே அரச பணியில் இருப்பவர்கள் பட்டதாரி பயிலுனர் நியமனத்தை பெற்றுக்கொண்டால் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அல்லது மாவட்ட செயலகத்துக்கு தொலைபேசியில் அறிவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். யாழ் மாவட்ட செயலகம் 021 2222235 அல்லது பொதுச்சேவை ஆணைக்குழு 011 2 136600 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு முறையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதேச செயலகங்களுக்கும் முறையிடலாம் என மாவட்ட செயலகங்கள் அறிவித்துள்ளன.
அவ்வாறு தகவல் கிடைக்குமிடத்து இரு வேலைகளும் இழக்கப்படும் எனவும் கடந்த வேலையின் போது வழங்கப்பட்ட சம்பளத்தின் முழுப்பகுதியையும் அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.