வேலையற்ற பட்டதாரிகளை பயிற்சியில் இணைக்கும் இரண்டாம் கட்டம் அடுத்தமாதம்

நாடு முழுவதும் உள்ள தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளை அரச துறைகளில் பயிற்சிகளில் இணைத்துக்கொள்வதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட நடவடிக்கைகயில் சுமார் 15,000 பட்டதாரிகள் பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரட்ண தெரிவித்துள்ளார். அவ்வாறு இணைத்துக்கொள்ளப்படுவோரின் வயதெல்லை 35லிருந்து 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கு ஒரு வருடகால பயிற்சி வழங்கப்படவுள்ளதுடன் பயிற்சிக்காலத்தில் 20,000 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. பயிற்சியை செவ்வனே பூர்த்தி செய்யும் பட்டதாரிகள் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் மேலதிக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435