வேலையற்ற பட்டதாரிகள் அரசநியமனம்- புதிய அமைச்சரவைத் தீர்மானம்

வேலையற்ற பட்டதாரிகளை அரச தொழில் இணைத்துக்கொள்ளும் போது உள்ளவாரி பட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்குவததென அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 5000 பேரில் பல்கலைக்கழகங்களில் உள்வாரி கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்கள் தொடர்பில் ஆராய்வுள்ளதாக அவ்வமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளக கற்கைநெறியை பூர்த்தி செய்தோர் எண்ணிக்கையை ஆராயும் பணி இன்னும் பூர்த்தியடையவில்லை என்று தெரிவித்துள்ள மேலதிக செயலாளர், முதற்கட்டமாக இணைத்துக்கொள்ளும் பட்டதாரிகளை உள்வாரி, வௌிவாரி பட்டதாரிகள் என்று வகைப்படுத்தாமல் விசேட தகைமையுடைய பட்டதாரிகள் மற்றும் எல்.டி.டி.ஈ இயக்கத்துடன் இருந்து புனர்வாழ்வு பெற்ற பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும், பட்டதாரிகளை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் உள்வாரி பட்டதாரிகளுக்கு முதலிடம் கொடுப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தொழிலற்ற பட்டதாரிகள் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இத்தீர்மானமானது பாரிய மனித உரிமை மீறலாகும் என அவ்வொன்றியத்தின் அழைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளதுடன் இத்தீர்மானத்தை மாற்றியமைத்து தொழிலற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435