​சமய போதனை என்ற பெயரில் மனித கடத்தல்- பிக்கு கைது

சமய போதனைக்காக அனுப்புவதாக கூறி பெண்களை வீட்டுப் பணிப்பெண்களாக டுபாய்க்கு அனுப்பி வந்த பிக்கு ஒருவர் உட்பட மூவரை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வடுகொடமுல்ல ஜயசிறி விகாரவாசி பல்லேதெனிய ரத்னசிறி , பொரல்ல மற்றும் மீதொடுமுல்ல பிரதேசங்களை சேர்ந்த இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வௌ்ளை நிற உடைகள் அணிந்திருந்த 10 பெண்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் உட்பிரவேசிக்கும் பகுதியில் காத்திருந்தவேளை சந்தேகமடைந்த பணியக விசேட சுற்றிவளைப்பு பிரிவினர் குறித்த பெண்களை விசாரணை செய்துள்ளனர்.

விசாரணைகளின் போது வீட்டுப் பணிப்பெண்களாக டுபாய் செல்வதாக கூறியுள்ள அப்பெண்களிடம் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் இருந்த பிக்கு ஒருவர் குறித்த பெண்கள் போதனை செய்வதற்காக டுபாய் அழைத்து செல்வதாகவும் பின்னர் நேபாளுக்கு சமய வழிபாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இப்பெண்கள் தொடர்பில் ஆராய்ந்த போது அப்பெண்களுக்கு ஐந்து வயதுக்கு குறைந்த பெண்கள் இருப்பதனால் சட்ட ரீதியாக வௌிநாடு செல்ல முடியாத காரணத்தினால் சட்டவிரோதமாக இவ்வாறு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்களுக்கு தலா ஐந்தாயிரம் வழங்கியுள்ள அப்பிக்கு பின்னர் தலா 75,000 ரூபா வீதம் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். வௌிநாடு சென்ற பின்னர் மாதாந்தம் 40,000 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்றும் பிக்கு அப்பெண்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

​தெரண/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435