வேலையற்ற பட்டதாரிகள் 8500 பேருக்கு ஆசிரியர் நியமனம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு 20,000 பேருக்கு தொழில் வழங்கும் நடவடிக்கையினூடாக 8500 ஆசிரியர் நியமனங்கள் விரைவில் வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஐந்தாயிரம் பேரை சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மிகுதி 3500 பேரையும் சேவையில் இணைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

‘அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் கிரியுல்ல ரத்னாலங்கார மகா வித்தியாலயத்தில் இரசாயனகூடம் மற்றும் ஆரம்ப பிரிவு கற்றல் மத்திய நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

கல்வித்துறையை அரசியல் தாக்கங்களில் இருந்து மீட்டெடுப்பது அவசியம் என்றும் கல்வித்துறையின் அனைத்து வெற்றிடங்களும் தகைமையுடையோருக்கு வழங்குவதே தனது குறிக்கோள் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435