வேலையற்ற பட்டதாரி நியமனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே?

அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் 3000 , திட்ட அதிகாரி நியமனம் 10,000 வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி கிடைத்தபோதும் அதில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் தென்னே ஞானாந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஹாலியல பிரதேசத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இந்நாட்டில் ஆட்சி செய்யும் அனைவரும் தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வருகின்றனர். நாட்டில் உள்ள மக்களின் பிரச்சினைகளை சொல்லிக்கொண்டிருப்பதற்கு அரசியல்வாதிகள் தேவையில்லை. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவசியமான வேலைத்திட்டத்தை செயற்படுத்தவே அவர்கள் தேவை.

இந்நாட்டில் வருடாந்தம் சுமார் பத்தாயிரம் பேர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து வௌியேறுகின்றனர். எனினும் அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டம் இதுவரை அமைக்கப்படவில்லை. பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்குவது என்ற விடயம் இன்று தேர்தல் மேடைகளை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போதைக்கு சுமார் ஐம்பதாயிரம் பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றி உள்ளனர்.

தேர்தல் குறித்த விடயங்கள் எமக்கு தேவையில்லை. கொடுக்க ஆரம்பித்த நியமனங்களை தொடர்ந்து வழங்குங்கள். அதற்கான அதிகாரம் அமைச்சின் செயலாளர்களுக்கு உண்டு என்று தேர்தல் ஆணைக்குழுவே கூறியுள்ளது. ஜனாதிபதி யாரென்பது குறித்து எமக்கு கவலையில்லை. யாருக்கும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கவேண்டும் என்ற அக்கறை இல்லை. அனைத்து பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் தேசிய கொள்கையை உருவாக்குமாறு நாம் கோருகிறோம். ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைத்து அதிகாரிகளும் இது தொடர்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பியிருப்போம். எமக்கு பதிலளிக்கவும் இல்லை. கலந்துரையாடலுக்கு அழைக்கவுமில்லை. இத்தகைய ஆட்சியாளர்கள் இருக்கையில் நாம் வன்முறையாளர்களாக மாறுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.

சுற்றுநிரூபத்தினூடாகவே பட்டதாரிகளை பிரித்தனர். விசேட தேவையுடைய பட்டதாரிகளுக்கான 3 வீத வேலைவாய்ப்புக்கான ஒதுக்கீட்டையும் இல்லாதொழித்தது. இதுவரையில் எந்த அரசாங்கமும் செய்யாதவற்றை இந்த அரசாங்கம் செய்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகிறார். நாட்டில் உள்ள பாடசாலைகள் 40,000 ஆசிரியர் பற்றாக்குறையுடன் செயற்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த 15,000 பேர் 7 மாகாணங்களில் நியமனங்கள் வழங்குமாறு அழுகின்றனர். வீதிதோரும் அடிவாங்குகின்றனர். அவமானப்படுத்தப்படுகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை கூறிக்கொண்டு திரியாமல் உரிய தீர்மானம் எடுக்கவே அரசாங்கம் உள்ளது. சரியான தீர்வை பெறாமல் நாம் ஓயமாட்டோம். எதிர்காலத்தில் 9 மாகாணங்களையும் இணைத்து நாம் புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம். இளைஞர்களின் பிரச்சினைகளை தொடர்ந்து குப்பையில் போடப்படுமாயின் அத்தகைய அரசாங்கத்தையும் ஆட்சியாளரையும் குப்பையில் போட நாம் முன்னின்று செயற்படுவோம் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435