இலங்கை கலால் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு வேலையில்லா பட்டதாரிகளை இணைப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
நீண்டகாலம் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.
கலால் திணைக்கள்தில் நீண்டகாலம் நிலவும் தொழில்ரீதியான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுப்பது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என அவ்வூடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.