வைத்தியசாலை ஊழியர்களுக்கு பேச்சுப்பயிற்சி

வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்யும் நோயாளர்களுடன் கருணையுடன் கதைப்பது எவ்வாறு என்பது தொடர்பிலான பயிற்சிகளை மருத்துவமனை ஊழியர்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பாலித்த மஹிபால தெரிவித்தார்.

சுகாதார சேவை ஊழியர்களுக்கு அவசியமான பல்வேறு பயிற்சிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சில மருத்தவமனைகளில் பணியாளர்கள் கருணையற்ற முறையில் கதைப்பதாக ஊடகவியலாளர் கடந்த 3ஆம் திகதி கொழும்பு சுகாதார கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதனையடுத்து மேற்கூறிய விடயத்தை தெரிவித்த பணிப்பாளர் நாயகம், சுகாதார சேவை பணியாளர்கள் ஓரிருவர் செய்யும் தவறுக்காக அனைவரும் தவறாக சித்தரிக்கப்படுகின்றனர் என்றும் இது தொடர்பில் பணியாளர்கள் தௌிவுப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435