வௌிநாடுகளில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கானோர் இன்று இலங்கைக்கு

கொவிட் 19 தொற்று காரணமாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் சுமார் நூறு பேர் இன்று (21) மாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தினூடாக இலங்கையை வந்தடையவுள்ளனர் என்று கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமானசேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக கல்விக்காக சென்று நாடு திரும்ப முடியாதிருந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்படுகின்றனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL1208 விசேட விமானம் சென்றுள்ளது என்றும் முதலில் கராச்சி விமானநிலயத்திற்கு செல்லும் குறித்த விமானம் அங்குள்ள மாணவர்களை ஏற்றிக்கொண்டு பின்னர் லாகூர் விமான நிலையத்திற்கு சென்று அங்குள்ள மாணவர்களையும் ஏற்றிக்கொண்டு இலங்கை வந்தடையும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று தொடக்கம் வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களை கட்டம் கட்டமாக நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படும் இலங்கையர்களின் உடல் வெப்பநிலை கணிக்கப்பட்ட பின்னர் விமான நிலையத்திற்குள் அழைத்து வரப்பட்டு குடிவரவு குடியழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று விமானநிலைய, விமான சேவைகள் நிறுவன தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் G.A. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்படும் இலங்கையர்களை விமான நிலையத்தில் சந்திக்க உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது. வௌிநபர்கள் எவரும் விமான நிலையத்தினுல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருதல் மற்றும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார சேவை பிரிவுகளின் ஆலோசனைகளுக்கமையவே முழுமையாக முன்னெடுக்கப்படுகிறது. குறித்த பயணிகளுக்கு அவசியமான அனைத்து அத்தியவசிய சேவைகளும் விமானநிலைய அதிகாரிகளினால் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று விமான நிலைய முகாமையாளர் ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

அழைத்து வரப்படும் அனைத்து இலங்கையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். நோய் அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்கப்படுவார்கள். வௌிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் அனைத்து இலங்கையர்களையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவதே சுகாதார சேவை பிரிவுகளின் எதிர்பார்ப்பு என்று குறித்த செயற்பாட்டுக்கு பொறுப்பான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

அரசாங்க தகவல் திணைக்களம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435