வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கான அரச வரியை அதிகரிக்கும் பாதீடு 2017

சவுதி அரேபியாவில் அண்மையில்) சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு 2017 முன்மொழிவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான விடயங்களும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவை தொடர்பான விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் தங்கியிருந்து பணிபுரியும் வௌிநாட்டுத் தொழிலாளர்கள் மாதாந்தம் 100 சவுதி ரியாலை அந்நாட்டு அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தவேண்டும். அதேபோல் அவர்களுடன் தங்கி வாழ்வோருக்காக ஒருவருக்கு 100 சவுதி ரியால் வீதம் செலுத்தப்படவேண்டும். உதாரணத்திற்கு கூறுவதாயிருப்பின் ஒரு வௌிநாட்டுப் பணியாளர் தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் சவுதியில் பணிபுரிந்தாராயின் மாதாந்தம 300 சவுதி ரியாலை வரியாக செலுத்த வேண்டும்.

இவ்வரித்தொகையானது எதிர்வரும் 2018ஆம் ஆண்டுடன் நான்கு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது. அதாவது ஒருவருக்கு 400 சவுதி ரியால் வீதம் செலுத்த வேண்டும்.

வௌிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் ஊழியருக்கு தலா 200 சவுதி ரியால் வீதம் அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தப்படவேண்டும்.

வௌிநாட்டுத் தொழிலாளர்கள் குறைவாகவும் உள்நாட்டுத் தொழிளார்கள் அதிகமாகவும் பணியாற்றினால் 400 சவுதி ரியாலில் இருந்து 300 சவுதி ரியாலாக குறைக்கப்படும்.

இதேதொகையானது 2019ஆம் ஆண்டில் வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மாதாந்த வரியானது 400 ரியால்களில் இருந்து 600 ரியால்களாக அதிகரிக்கப்படும். நிறுவனம் வரியாக தலா 300 சவுதி ரியால் வரியாக அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் உள்நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் செலுத்தும் தொகை 500 சவுதி ரியாலாக குறைவடையும்.

இதுவே, 2020ஆம் ஆண்டில் வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட 600 சவுதி ரியாலானது 800 ஆக அதிகரிக்கப்படவுள்ளதுடன் நிறுவனம் தொழிலாளருக்கு தலா 500 சவுதி ரியாலாக அரசாங்க வரியை செலுத்தவேண்டும். உள்நாட்டுத் தொழிலாளர் அதிகமாக இருப்பின் 800 இலிருந்து 700 சவுதி ரியாலாக குறைக்கப்படும்.

இவ்வரியானது, வீட்டுப் பணிப்பெண்கள், வீட்டுச் சாரதிகள் மற்றும் துப்புறவுத் தொழிலாளர்களுக்கு செல்லுபடியாகாது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435