மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 49 கடவுச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் அவர், மத்திய கிழக்கில் தொழில்வாய்ப்பு பெற்று தருவதவதாக தெரிவித்து தமது வீட்டிலேயே முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு மோசடியாக பணம் பெற்றுள்ளாரா? என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.