வௌியில் நடமாட அனுமதி அட்டை அவசியம்- அபுதாபி பொலிஸ்

தொற்று நீக்கும் பணிகள் இடம்பெறும் நேரங்களில் வௌியில் நடமாட அனுமதி அட்டை பெறவேண்டும என்று அபுதாபி பொலிஸார் அறிவித்துள்ளனர் .

தொற்று நீக்கப்படும் காலப்பகுதியில் இரவு 10.00 மணி தொடக்கம் காலை 6.00 மணி வரையில் வௌியில் செல்வதற்கு அனுமதி பெறவேண்டும் என்று அபுதாபி பொலிஸார் உத்தியோகப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

குறித்த நேரத்தில் பணிகளில் ஈடுபடுபவர்கள் அபுதாபி அவசரநிலை மற்றும் அனர்த்த குழுவிடம் பெயர் மற்றும் வாகன இலக்கத்தை வழங்கவேண்டும்.

முக்கிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இம்முறையில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. கொவிட் 19 பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டதிட்டங்களை ஒழுங்காக பின்பற்றாதவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதாயின் விதி மீறல் இடம்பெற்று 15 நாட்களுக்குள் pp.gov.ae என்ற இணையதளத்தில பிரவேசித்து முறைபாடுகளை பதிவு செய்யலாம் என்றும் டிவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொற்றுநீக்கும் பணிகள் இடம்பெறும் காலப்பகுதியில் நடமாடுவதற்கான அனுமதியை பெற dpolice.gov.ae. இணையதளத்தில் பிரவேசிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435