வௌிவாரி பட்டப்படிப்புக்கு இடமளிக்குக!

வௌிவாரி பட்டப்படிப்பை இல்லாது செய்வதற்காக அரசாங்கம் வௌியிட்ட 2016/13 சுற்றுநிரூத்தை ரத்து செய்யாது தீர்வு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வௌிவாரி பட்டப்படிப்பை பாதுகாக்கும் அமைப்பு நேற்று (25) கேகாலை நகரில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தது.

இவ்வார்ப்பாட்ட ஊர்வலத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க கேகாலை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் இரு மணி நேர ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கருத்து தெரிவித்த சோசலிச இளைஞர் அமைப்பு, இவ்வாண்டின் ஓகஸ்ட் 31ஆம் திகதி தொடக்கம் வறிய பெற்றோரின் பிள்ளைகளுடைய கல்வியுரிமையை நல்லாட்சி பறித்துக் கொண்டது. அதன் பின்னர் வௌிவாரி பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட அனைவரும் நடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள நடவடிக்ைக மேற்கொண்டோம்.

நாம் GAQ என்ற போது அப்படியென்றால் என்ன என்று கேட்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு GAQ பற்றி தெரியாது. BBQ பற்றி மட்டுமே அவர்கள் அறிந்துள்ளனர். நாடு முழுவதும் நாங்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டமையினால் தான் எம்மோடு கலந்துரையாட ஜனாதிபதி நேரம் ஒதுக்கித் தந்தார். இது எங்களுடைய முயற்சிக்கு கிடைத்த பாரிய வெற்றி.

​வௌிவாரி பட்டப்படிப்பை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தருவதாக எம்முடனான சந்திப்பின் போது ஜனாதிபதி உறுதியளித்தார். கல்வியை தடை செய்வது தனது நோக்கமல்ல என்று இதன் போது ஜனாதிபதி தெரிவித்தார். நாம் இன்று நினைவூட்டுகிறோம், ஜனாதிபதியவர்களே! நீர் எம்மிடம் உறுதியளித்து ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்கள் கடந்து விட்டன. இந்தக் காலப்பகுதிக்குள் 2014ஆம் ஆண்டு மாணவர்கள் ஒருவருக்காயினும் கடிதங்கள் வரவில்லை. பத்திரிகையில் செய்திகளை பார்க்கவில்லையா என்று நாம் ஜனாதிபதியிடம் கேட்கிறோம். அது மட்டுமல்ல 2015 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. எமது முக்கிய நோக்கமான சுற்றுநிரூபம் ரத்து செய்யப்படுவதாக இதுவரை எந்த செய்தியும் வௌியாகவில்லை. இவ்வாறு தான் நீங்கள் உங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறீர்களா என்று நாம் உங்களிடம் கேள்வியெழுப்ப விரும்புகிறோம்.

இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை நாமறிவோம். இலங்கையில் இரு செவிட்டு யானைகள் உள்ளன. ஒருவர் நாட்டின் பிரதமர், மற்றவர் முழு கல்வி நடவடிக்கைகளையும் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துள்ள உயர் கல்வியமைச்சர். உங்கள் நோக்கம், கொள்கை என்னவென்று நாமறிவோம். அவற்றுடன் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உங்கள் தேவையெல்லாம் 120 இலட்சம் செலுத்தி கற்கும் கடைகளுக்கு இம்மாணவர்களை கற்க அனுப்பவது என்பது நாமறிவோம். உங்கள் கொள்கை அதாகவிவருப்பினும் கலந்துரையாடல்களுக்கு நேரம் ஒதுக்கினால் நாம் சிறுபிள்ளைகள் போன்று கதைக்க மறந்திருபபோம் என்று நீங்கள் நினைத்தீர்களா? அப்படியொரு நாளும் இருக்கப் போவதில்லை. இன்று கேகாலைக்கு வந்து பாருங்கள். நாம் மீண்டும் போராட ஆரம்பித்து விட்டோம். எம்மிடம் இடைவேளை கிடையாது. அதனால் செவிட்டு யானைகளுக்கு நாம் கூறுகிறோம். உங்கள் வெற்றி இந்த ஏழை பெற்றோர் பிள்ளைகளின் வெற்றியிலேயே தங்கியுள்ளது. கலந்துரையாடல்களுக்கு நாம் தயாராகவுள்ளோம், தனித்தனியாக அல்ல, அனைவரும் இணைந்தே கலந்துரையாடல்கள் செய்வோம்.

நாம் மீண்டும் ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகிறோம், எம்மிடம் இடைவேளை இல்லை. எம்மிடம் இருப்பது ஒரேயொரு இடைவேளை மாத்திரம் தான். அது எம்மை இவ்வாறு வீதிக்கு இழுத்த சுற்றுநிருபத்தை ரத்து செய்த பின்னர்தான். அதனால் நாம் கூறுகிறோம், 2014ஆம் ஆண்டு மாணவர்கள் அனைவரையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் 2015ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும். சுற்றுநிரூபத்தை ரத்து செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல அவர்களே, நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள். நாம் இன்று கேகாலையில் ஆரம்பித்தது போன்று நாளை பதுளை, மாத்தறை, காலி என அனைத்து மாவட்டங்களிலும் நாம் போராட ஆரம்பிப்போம். அப்படியும் இதனை ரத்து செய்யாவிட்டால் கொழும்புக்கு வந்து இரண்டில் ஒரு தீர்வை பெற நாம் தயாராகவுள்ளோம் என்று சோசலிச இளைஞர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435