ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை சத்திரசிகிச்சைகள் ரத்து

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இன்று (08) நடத்தப்படவிருந்த அனைத்து சத்திரசிகிச்சைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் டொக்டர் சுசித் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தாதியர் வைத்தியசாலைக்கு இன்று சமூகமளிக்காமையினால் இவ்வாறு சத்திரசிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைவிரல் அடையாள பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாதியர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணியின் செயற்றிறனை மேம்படுத்துவதற்காகவே விரல் பதிவு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எனினும் தாதிருக்கு வேறுபாடு காட்டும் நோக்கில் இம்முறை அறிமுகப்படுத்தப்படுவதாக தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. எது எவ்வாறு இருப்பினும் அனைத்து ஊழியர்களும் குறித்து முறையை பின்பற்றுவது கட்டாயமாகும் என்று தாதியர் சங்கத்தின் செயலாளர் சமிந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435