​கொட்டும் மழையிலும் போராடும் அம்பாறை பட்டதாரிகள்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப்போராட்டம் நேற்று 18வது நாளாக காரைத்தீவு விபுலானந்த சதுக்கமருகே புதிய பரிணாமத்துடன் ஜருராக நடைபெற்றுவருகின்றது என வேலையற்றபட்டதாரி சங்கப்பொருளாளர் கே.சுரேஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு பெய்த அடைமழையினால் பட்டதாரிகள் தங்கியிருந்த கூடாரம் ஓழுகி மழைநீர் கூடாரத்தினுள் நுழைந்து இடமெல்லாம் நனைத்தது.

அதனால் அவர்கள் மிகுந்த அசௌகரியப்பட்டார்கள். பெண்பட்டதாரிகள் சிரமப்பட்டார்கள். இருப்பினும் அவர்கள் அதனை பொருட்படுத்தாது போராட்டத்தைத் தொடர்ந்துள்ளதுடன் கூடாரத்தினுள் முன்னே தராசும் அத்தாங்கும் தொடங்கவிட்டிருந்தனர்.

இது தொடர்பில் அங்கிருந்த வேலையற்றபட்டதாரி சங்கப்பொருளாளர் கே.சுரேசிடம் வினவிய போது இவ்வாறு கூறியுள்ளார்.

நாம் பட்டம் முடித்தும் எமது தாய்தந்தையர் செய்துவந்த தொழிலையே இன்னமும் செய்யவேண்டியிருக்கிறது. உதாரணமாக மீன்பிடித் தொழிலை இங்கு சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

படித்தும் அத்தாங்குடன் அலையவேண்டுமாகவிருந்தால் எதிர்கால சந்ததி படிக்குமா? அல்லது படிக்கத்தான் ஆசை வருமா? பட்டங்கள் விற்பனைப்பண்டங்களா? மற்றது பட்டங்களை தராசில் விற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலுள்ளோம்.

என்ன விலைக்கு என்ன பட்டம் என்று கேட்குமளவிற்கு பட்டங்கள் விற்பனைப் பண்டங்களாகிவிட்டன. வெளிவாரியாக பணத்திற்கு பட்டங்கள் விற்கப்படுகின்றன.

இந்த வெளிவாரிப்படிப்பால்தான் எமது பட்டங்களுக்கு மௌசு குறைந்தது. அதனால் தான் இன்று வேலைவாயப்பில்லாமல் கஸ்ட்டப்பட்டு அலைகின்றோம். வெளிவாரி முறைமையினால் கல்விக்கடைகள் பணம் சம்பாதிக்கின்றன. அவர்கள் உழைப்பதற்காக கல்வியை விற்கின்றார்கள்.

அதனால் பட்டங்கள் மலினப்படுத்தப்படுகின்றன. இது மட்டுப்படுத்தப்படவேண்டும். இன்றேல் பல்கலையில் பட்டம்பெறும் மாணவர்கள் இப்படி முதலில் எமக்கு வழியைக்காட்டுங்கள். நேற்று கிழக்குவிவசாய அமைச்சர் ஒரு கருத்தைச்சொன்னார்.

கணிதம், விவசாயம், விஞ்ஞானம் படிக்கவேண்டுமாம். நாம் எல்லா கலையையும் நுண்கலையையும் படித்துமுடித்துவிட்டோம். எங்களுக்கு முதலில் வழியைக்காட்டுங்கள். வரும் சந்ததியிடம் உங்கள் வேதத்தை ஓதுங்கள்.

தமிழர் கலையை வளர்க்க வேண்டும். அழிந்து போகும் கலைகளை உயிர்ப்பிக்கவேண்டும் என்றெல்லாம் வாய்கிழியக்கத்துகிறார்கள். ஆனால் அத்தகைய பாடப்பரப்பில் பட்டங்களை முடித்த நாம் நாயாய் 18 நாட்களாக அலைகின்றோம்.கவனிப்பாரில்லை.

சமகால நிலைமை இத்தகைய அரசியல்வாதிகள் வந்துகூடப்பார்த்ததில்லை. இன்னும் எமது போராட்டத்திற்கு முடிவுகிட்டவில்லை.எவ்வித முன்னேற்றமுமில்லை.

கிழக்கு முதலமைச்சர் நல்லதொரு முடிவை எடுத்து மத்திய அரசு வரை பேசினார். ஆனால் இன்று அவர் இந்தியா சென்றுவிட்டார். இன்னும் இருவாரங்களுள் தீர்வு என்று கூறுகின்றார்கள்.

எது எப்படியிருப்பினும் எமக்கென்று தனியா தீர்வு நம்பகமாக கையில் கிடைக்கும்வரை எமது பேராட்டம் மழை அல்ல இடி அல்ல புயல் வந்தாலும் தொடரும் என வேலையற்றபட்டதாரி சங்கப்பொருளாளர் கே.சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி- தமிழ் வின்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435